அன்று நடராஜனுக்கு நடக்கும்போது யாருமே தட்டிக்கேட்கல: கடுப்பான ஷர்துல்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஷர்துல் தாகூர் பகிர்ந்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன

இரு அணி வீரர்களும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சர் மழை பொழிந்து இந்திய வீரர்களை அச்சுறுத்தினர்.

அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பார்த்து ஏதோ சொல்லி வம்பிழுக்க, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தொடர்ந்து பவுன்சர்களை வீசி பும்ரா பழி தீர்த்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'லார்ட்ஸ் டெஸ்ட் விவகாரம் ஓவல் மைதானம் வரை வந்தது. ஆண்டர்சன் பும்ராவை நோக்கி ஏதோ தகாத வார்த்தையில் திட்டிவிட்டார்.அவர் கூறிய வார்த்தையை பொது வெளியில் சொல்ல முடியாது. அதன்பிறகுதான் நாங்கள் ஆவேசமடைந்தோம்.

வெளிநாட்டு மைதானங்களில் நம் வீரர்கள் மீது அதிகமான பவுன்சர் வீசப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நடராஜனுக்கு மிட்செல் ஸ்டார்க்கும், பேட் கம்மின்ஸும் பவுன்சர் மழை பொழிந்தனர். அவர்களுக்கு நன்றாக தெரியும், நடராஜன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடாதவர் என்று. அப்போது இதை யாராவது தட்டிக்கேட்டார்களா?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது நடராஜன் மட்டுமல்லாமல் அஸ்வின், புஜாரா, வாசிங்டன் சுந்தர் என இந்திய வீரர்கள் பலரின் உடம்பை குறி வைத்தே ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்