‘நானும் ரௌடி தான்’...இங்கிலாந்து அணியை மிரளவிட்ட ஷர்துல் தாகூர் - புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்தனர்.
முன்னணி பேட்ஸ்மேன்களே இங்கிலாந்து பவுலர்களை கண்டு மிரளும் நிலையில் ஷர்துல் அவர்களை அசால்ட்டாக எதிர்கொண்டார். சிக்ஸர் பவுண்டரி என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதுவே இந்திய அணி தரப்பில் அதிகப்பட்ச ஸ்கோராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.