“உட்ராதீங்க எப்போவ்…உட்ராதீங்க எம்மோவ்”,இவர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குவார் - முன்னாள் வீரர் உறுதி

shardhul thakur sanjay bangar
By Swetha Subash Dec 18, 2021 07:49 AM GMT
Report

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற 26ம் தேதி துவங்க உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக இல்லாததன் காரணமாக இந்திய அணி எந்த வீரரை ஆடும் லெவனில் விளையாட வைக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதனால் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எந்த வீரரை தேர்ந்தெடுத்தால் இந்திய அணிக்கு அது பலமாக அமையும் என்ற தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஷர்துல் தாக்கூரை ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும்.

ஏனென்றால் இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மிகச் சிறந்த முறையில் விளையாடக் கூடியவர், ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சார்பில் தாக்கூர் மிக சிறந்த முறையில் விளையாடியுள்ளார்.

மேலும் தென் ஆப்பிரிக்கா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருப்பதால் விராட் கோலி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்களோடு களமிறங்குவார்.

இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் விராட் கோலிக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் என்றும் சஞ்சய் பங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.