சரத்பவார் திடீரென மருத்துவமனையில் அனுமதி- காரணம் என்ன?

hospital politician congress Sharad Pawar
By Jon Mar 30, 2021 03:20 AM GMT
Report

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் மார்ச் 31ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெவித்துள்ளனர். புற்றுநோயிலிருந்து தப்பிய 80 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் 2004ம் ஆண்டில் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பவார் நேற்று மாலை வயிற்றில் சிறிது வலியை உணர்ந்தார். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது. மேலதிக அறிவிப்பு வரும் வரை அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார்.