தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவார் இருக்க வேண்டும் : உயர்மட்டக்குழு தீர்மானம்
தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என உயர்மட்ட குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்பவார் விலகல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல நடக்கவுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பில் கட்சி நிர்வாகம்
ஏற்கனவே, சரத் பவார், அடுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்க உயர்மட்ட குழுவை நிர்ணயித்து இருந்தார். இந்த உயர்மட்ட குழு இன்று மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவராக சரத் பவார் தான் தொடர வேண்டும் என குழு தீர்மானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே கட்சி அலுவகத்திற்கு வெளியே தொண்டர்கள் சரத் பவருக்கு ஆதரவாக அவர் பதவியில் தொடரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைவர் யார் என்பதை பற்றி ஆலோசிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.