மோடி முதல் சரத் பவார் வரை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட முக்கிய புள்ளிகள்

corona workers mumbai scientist
By Jon Mar 04, 2021 12:19 PM GMT
Report

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் 65 வயதுக்கு அதிகமான முதியவர்களுக்கும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது.

இதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் அரசியல்வாதிகள், தலைவர்கள் பொது வெளியில் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது இந்தியாவில் அப்படியாரும் செய்யவில்லை என விமர்சனம் நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பல தலைவர்களும் இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.