தற்கொலை செஞ்சிக்கலாம்னு நினைத்தேன்; கதறி அழுதேன் - பிரபல நடிகர் வேதனை
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்ததாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
சாந்தனு
சாந்தனு பாக்யராஜ் நடித்திருக்கும் ராவணக்கோட்டம் படம் மே மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாந்தனு, சக்கரக்கட்டிக்கு பிறகு மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக ராவணக்கோட்டம் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
கிராமத்து பையனாக நடித்திருக்கிறேன். அது எளிது அல்ல. காலில் ரத்தம் வர நடித்திருக்கிறேன். எங்களின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இரு சமூக மக்கள் வணங்கும் மரத்தை வெட்டிவிட்டார்கள். அதனால் ஊர் மக்கள் எங்களிடம் சண்டைக்கு வந்தார்கள். சொல்ல முடியாத தடைகள் எல்லாம் வந்தது.
வருத்தம்
ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஓரமாக சென்று கதறி அழுதுவிட்டு வந்திருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் உயிரை கொடுத்து வேலை செய்கிறோம்.
ஷூட்டிங்ஸ்பாட்டில் பல விதமாக ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பறித்தார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
