விஜயகாந்த் சிலை சிறப்பு விழா.. திடிரென மயங்கி விழுந்த சண்முகபாண்டியன்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்தின் சிலை திறப்பு விழாவில் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்தின் சிலை
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 72 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் உட்படக் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என ஏராளமானோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
சண்முகபாண்டியன்
இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ஆள் உயரச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.அப்போது விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.