தயவு செஞ்சி இப்படிலாம் பண்ணாதீங்க - வீடியோவில் புலம்பிய ஸ்ருதி சண்முகப்ரியா
தனது கணவர் குறித்து தவறாக செய்திகளை வெளியிட வேண்டாமென சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்ரியா வேதனையுடன் வீடியோ இன்று வெளியிட்டுள்ளார்.
ஸ்ருதி சண்முகப்ரியா
நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமான நடிகை சுருதி சண்முகப்பிரியா, கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்தாண்டு சென்னையைச் சேர்ந்த ஜிம் ட்ரைனருமான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சேகர் கடந்த 2022- ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர்.
தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்
இந்நிலையில் தனது கணவர் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என நடிகை ஸ்ருதி ஷ்ணமுகப்பிரியா ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்ன நடந்தது என்பது பற்றி தெரியாதவர்கள் சில யூடியூப் சேனல்கள், பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
ஆனால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இறந்து விட்டார், அவரின் மரணத்திற்கு காரணம்... இது... அது என்று யூடியூப் வீடியோக்களில் அவர்களாகவே புது புது காரணங்களைக் கூறுகிறார்கள் ஆனால் அப்படி வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளார்.
மேலும் தனது கணவர் ஒரு சிவில் இன்ஜினியர் என்றும் பேஷனுக்காக தான் பாடி பில்டராக இருந்தார். இப்படி வெளியாகும் தவறான தகவல்களால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.