இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர் - யார் தெரியுமா?
அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ள இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
இயக்குநர் ஷங்கர் நேற்றுஅந்நியன் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்தியன் 2' படத்திற்கு பல கோடிகள் செலவு செய்துள்ளதால், இந்தியன் 2' படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது. இதை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ள லைகா நிறுவனம்.ஏற்கனவே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த நிலையில் ,எழுத்தாளர் சுஜாதா எழுதிய அந்நியன் படத்தின் கதையின் உரிமை தம்மிடம் உள்ளதாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
15 ஆண்டுகளுக்கு முன் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன்திரைப்படம் தமிழில் நல்ல வசூலை பெற்று தந்தது , தற்போது இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ஷங்கர் இயக்க உள்ளார்.