டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தா? எந்தவித சதித் திட்டமும் இல்லை -டிஜிபிசங்கர் ஜிவால்!
டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று டிஜிபிசங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிஜிபி கல்பனா நாயக்
கடந்த ஆண்டு ஆக. 14-ம் தேதி கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் இருந்து கடிதம் வந்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரிக்க சென்னை காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர், தடயவியல் துறை நிபுணர்கள், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தனியார் ஏர்கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், அறையில் உள்ள காப்பர் வயர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மறுப்பு
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு 750 எஸ்ஐக்கள் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் தேர்வு நடைபெற்றது.
அதன் முடிவுகள் 2024 ஜன.30 அன்று வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 5 விண்ணப்பதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் வழிகாட்டுதல் அடிப்படையிலும் தேர்வு முடிவுகள் 2024 அக்.3-ம் தேதி வெளியிடப்பட்டன.
எனவே கூடுதல் டிஜிபி கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.