சிம்புவைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

Shankar Silambarasan Only Kollywood
By Sumathi Aug 02, 2022 11:57 AM GMT
Report

இயக்குநர் ஷங்கருக்கு ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

இயக்குநர்  ஷங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எனவும் பெயரெடுத்தவர் ஷங்கர். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

சிம்புவைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர் பட்டம்! | Shankar Is To Be Awarded An Honorary Doctorate

மேலும் தமிழில் அதிகம் வசூல் செய்த திரைப்படமான 2.0 திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 கௌரவ டாக்டர் பட்டம்

அதேபோல் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து அவர் திரைப்படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு, ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் 5-ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

ஏற்கனவே அந்த பல்கலைக்கழகம் நடிகர் சிம்பு உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு விரைவில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளனர்.