ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கும் ஷேன் வாட்சன்..உற்சாகத்தில் ரசிகர்கள்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் படு சுவாரஸ்யமாக நடைப்பெற்று முடிந்தது.
மெகா ஏலம் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதன்படி வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே மாதம் முதல் வாரம் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தல தோனிக்கு மிகவும் நெருங்கிய வீரரான ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக திரும்புகிறார்.
ஆனால் அது சிஎஸ்கேவுக்கு இல்லை, இந்த முறை அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்லவிருக்கிறார்.
இது தோனிக்கே ஆச்சரியமான தகவலாக இருந்தாலும் நீண்ட நாட்கள் ஷேனை சமாதானப்படுத்தி தான் ரிக்கிப்பாண்டிங் அவரை அணிக்குள் சேர்த்துள்ளார்.
டெல்லி அணியில் துணைக்கேப்டனாக இருந்த முகமது கைஃப் பதவி விலகியதையடுத்து தற்போது வாட்சன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியில் இருந்த ஷேன் வாட்சன் அதன்பின்னர் சாம்பியன் சிஎஸ்கே அணியில் இணைந்தார்.
கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஐபிஎல் அனுபவம் உள்ள அவருக்கு சவால் மிகுந்த அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் வியூகங்கள்நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
