மரணத்தைப் பார்த்து பயப்படாத வார்னே - கடைசி காலத்தில் ஆசைப்பட்ட விஷயம் இதுதான்

shanewarne RIPshanewarne
By Petchi Avudaiappan Mar 16, 2022 06:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

மரணத்தைப் பார்த்து பயப்படாத வார்னே - கடைசி காலத்தில் ஆசைப்பட்ட விஷயம் இதுதான் | Shane Warne Wanted To Live 30 Years More

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் கடைசி காலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தனர். 

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வார்னேவுக்கு உறவு ஆலோசனைகள் வழங்கி வந்த லியோன் யங் என்பவர் அவர் கூறியதாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் வார்னே 3 மாத விடுமுறைக்கும், தன்னுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் எண்ணியிருந்ததாக கூறியுள்ளார். 

தன் கடந்த காலத்தைப்  பற்றி எப்போதும் சிந்திக்காத வானே இன்னும் 30 ஆண்டுகள் உயிர் வாழ நினைத்ததாக லியோன் யங் கூறியுள்ளார்.