அடிச்சு சொல்றேன் இவுங்க தான் டி20 கப் அடிப்பாங்க - சேன் வார்னே ஓபன் டாக்
நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் ஜாம்பவனான சேன் வார்னே ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவாக இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இதில் தற்போது க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்று அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ளது.
இந்த சுற்றில் தான் இந்தியா பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் மோத உள்ளன. பரபரப்பான போட்டிகள் துவங்க உள்ளதால் இந்த தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்,
எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்தான தங்களது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவருமான சேன் வார்னே, இந்த முறை எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
I think Eng & India have to go in as fav’s for the T/20 WC. NZ always perform well in @ICC events too. But I have a feeling the Aussies are being underestimated as they have a lot of match winners in their squad. Then you have Pakistan & the Wi. Excited to see who will win ?
— Shane Warne (@ShaneWarne) October 21, 2021
இது குறித்து சேன் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில், 'என்னை பொறுத்தவரையில் இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும்.
நியூசிலாந்து அணியும் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருகிறது. அதே போல் அதிகமான சிறந்த வீரர்களை உள்ளடக்கியுள்ள ஆஸ்திரேலிய அணியை மற்ற அணிகள் குறைத்து மதிப்பிடுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் டி.20 போட்டிகளில் மிரட்டி வருவதால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் சேன் வார்னே வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், 'டேவிட் வார்னர் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் கடந்த போட்டிகளில் சொதப்பியதால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிட கூடாது.
அவர்கள் எவ்வளவு திறமையான வீரர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இருவரில் ஒருவர் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
