முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் வார்னேவுக்கு கொரோனா உறுதி

Shane Warne Covid 19 positive Australian cricket team
By Petchi Avudaiappan Aug 02, 2021 09:03 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர் ஷேன் வார்னே.

தற்போது லண்டன் ஸ்பிரிட் எனும் டி20 அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவருக்கு சில தினங்கள் முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா உறுதியானது.

இதனையடுத்து ஷேன் வார்னே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேநேரம் அணியின் மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.