ஆஸ்திரேலிய மண்ணில் வார்னேவின் உடல் - கண்ணீர் மல்க விடை கொடுக்க தயாராகும் ரசிகர்கள்
மாரடைப்பால் காலமான முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டது.
#ShaneWarne’s body has just landed at Essendon Fields @theage pic.twitter.com/AK5jSSHwj9
— Cassie Morgan (@cassieemorgan) March 10, 2022
அங்கு சென்றதும் வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்யவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் வார்னே உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க விக்டோரியா மாகாண அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்னேவின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.