ஷேன் வார்னே கடைசியாக செய்த செயல் - அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தனர்.'
வார்னே மரணம் பலரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதனிடையே மார்ச் 4 ஆம் தேதி வார்னே இறப்பதற்கு முன்பாக நடைபெற்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அன்றைய தினம் தாய்லாந்தில் உள்ள தனது ஃபேரரெட் துணிக்கடையில் புதிய துணிகளை வாங்கி விட்டு வந்துள்ளார். அங்கு நீண்ட நேரம் காத்திருந்து தனது புதிய சூட்களை பெற்றுக்கொண்ட பின்னர் அறைக்கு திரும்பிய பின் தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.