நியூசிலாந்துக்கு நிச்சயம் சிக்கல்தான் - ஷேன் வார்னே கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் களமிறங்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக சவுத்தாம்டன் களத்தில் மிகப்பெரிய அளவில் பந்து ஸ்பின்னாக போகிறது என்றும்,
அதற்கான அறிகுறிகள் தற்போதே தெரிய தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 275 ரன்கள் முதல் 300 ரன்கள் அடித்தால் போதும். அது நியூசிலாந்துக்கு சிக்கல் தான் என வார்னே கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளருக்கு இடமில்லை என்பதால் ஷேன் வார்னே இத்தகைய விமர்சனத்தை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.