சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் - ரசிகர்கள் கண்ணீர்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் திகழ்ந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக திகழ்ந்தார்.
ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்த வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ள அவர் சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் தங்கியிருந்த விடுதியிலேயே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேன் வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.