ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் இதுதான் : ஷாக் ரிப்போர்ட் கொடுத்த மருத்துவர்கள்

shanewarne Australiancrickter naturalcauses
By Irumporai Mar 09, 2022 01:41 PM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மரணத்திற்கு, அவர் கடைப்பிடித்த உணவு முறையே காரணம் எனக் கூறப்படுகிறது. சுழற்பந்து ஜாம்பவானாக அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே கடந்த 4ம் தேதி தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டு கிரிக்கெட் உலகமே கண்ணீர் விட்டது. மேலும் முன்னாள், இன்னாள் வீரர்கள் என பிரபலங்கள் பலரும் அவருக்கு இறங்கல் தெரிவித்தனர்

இந்த நிலையில் ஷேன் வார்ன் மரணத்திற்கு அவரது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மீண்டும் பழைய உடல் வடிவதைப் பெறுவதற்காக அவர் தீவிர திரவ உணவுகளை உட்கொண்டதாக மருத்தவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 14 நாட்களாக அவர் திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும், அதன் காரணமாக அவர் அடிக்கடி வியர்த்ததாகவும் கூறப்படுகிறது. அதிகமாக வெண்ணெய் எடுத்துக் கொண்டதும், தொடர்ந்து புகைப் பிடித்ததும் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.