ஷேன் வார்னே இறந்தது இப்படித்தான் - அருகில் இருந்த நண்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ShaneWarne shanewarne RIPShaneWarne CricketAustralia
By Petchi Avudaiappan Mar 05, 2022 03:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே எப்படி உயிரிழந்தார் என்பதை அவரது நண்பர் கண்ணீர் மல்க விளக்கியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்ட வந்த அவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சில தினங்களுக்கு முன் இறங்கினார். இதனிடையே வார்னே தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இப்படி தான் உயிரிழந்தார் என பலரும் பலர் விதமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்தில் நடந்தது என்ன என்பது குறித்து வார்னேவின் அருகில் இருந்த நண்பர் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் தாய்லாந்துக்கு வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் இன்ப சுற்றுலா வந்துள்ளனர். அப்போது பகலில் நண்பர்கள் ஊர் சுற்றிவிட்டு மாலை நேரத்தில் ஓய்வு எடுப்பதற்காக அவர்களது விடுதிக்கு சென்றுள்ளனர்.

மேலும் இரவு நேர உணவுக்காக நண்பர்கள்  வெளியே காத்திருந்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் வார்னே மட்டும் அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர் அறைக்கு உள்ளே சென்று பார்த்த போது வார்னே படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.  அவர்கள் வருவதற்கு முன்பே சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் வார்னேவை பரிசோதனை செய்து அவர் இறந்ததை உறுதி செய்தனர். இதனால் இது இயற்கையான மரணம் என கூறப்படுகிறது.