ஷேன் வார்னே மரணம் - காவல் துறை வெளியிட்ட முக்கிய தகவல்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார்.
இவரின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவருடைய சுழற் பந்து மந்திரம் அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. கிரிக்கெட் உலகில் கொட்டிக்கட்டி பறந்த ஷேன் வார்னேவின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இயற்கையான முறையிலேயே உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.