கிரிக்கெட் மட்டையால் ஷேன் வார்னே படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ஆசிரியர்

ShaneWarne CricketerShaneWarne ShaneWarneDeath TeacherDrawing
By Thahir Mar 05, 2022 06:47 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் காலமான ஷேன் வார்னே படத்தை கிரிக்கெட் மட்டையால் வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சு.செல்வம்.

கிரிக்கெட் மட்டையால்  ஷேன் வார்னே படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ஆசிரியர் | Shane Warne Cricketer Death Teacher Drawing

கிரிக்கெட் மட்டையை கொண்டு ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே உருவத்தை வரைந்தார்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வார்னே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் கிரிக்கெட் மட்டையால் வார்னே படத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய அஞ்சலி செலுத்தினர் ஓவிய ஆசிரியர் செல்வம் .