ஒரே பந்தால் உலக புகழ் பெற்ற வார்னே..மரணத்தை தாண்டியும் நிற்கும் சாதனைகள்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம் தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ள நிலையில் அவரது கடந்த கால வரலாறுகளை பற்றி பார்ப்போம்.
கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் சுழற்பந்துவீச்சு என்பது மிகவும் பிரபலம். காலம் மாற்றத்தா;ல் சுழற்பந்துவீச்சு மீதான மோகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மாறி 1970களின் தொடக்கத்தில் வந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டாளத்தால்; அதனை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை.
அப்படியான சூழலில் 1993 ஆம் ஆண்டு வார்னே நடத்திய மாயாஜாலம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து கிட்டதட்ட 100 ஆண்டுகளில் இப்படி ஒரு பந்தை யாரும் வீசியதில்லை என்ற பெருமையை பெற்றார் ஷேன் வார்னே .
அந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் கெட்டிங்கிற்கு வார்னே வீசிய பந்து லேக் சைடில் வைட் போல் சென்று அப்படியே திரும்பி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. அப்படி ஒரு பந்தை அதுவரை யாரும் கனவில் கூட பார்த்து இல்லை.
தாம் எப்படி ஆட்டமிழந்தோம் என்பதை தெரியாமல் மைக் கெட்டிங் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். அந்த தொடரின் வார்னே 24 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.