சர்வதேச அளவில் இந்த 2 பவுலர்களும் சூப்பர் - ஷேன் வார்னே புகழும் அந்த இருவர் யார்?

Australia Teamindia Ravichandranashwin ShaneWarne INDvSA Nathanlyon
3 மாதங்கள் முன்

 ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே சர்வதேச அளவில் விளையாடி வரும் இரு பந்து வீச்சாளர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர் அஸ்வினின் சுழற்பந்துவீச்சு எடுபடவில்லை என கூறி அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்குங்கள் என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்த 2 பவுலர்களும் சூப்பர் - ஷேன் வார்னே புகழும் அந்த இருவர் யார்?

இதனிடையே நிகழ்கால கிரிக்கெட் தொடரின் சுழற்பந்து ஜாம்பவான்களாக திகழும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் நாதன் லியான் ஆகிய இருவர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷான் வார்னே பாராட்டி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் மற்றும் நாதன் லியான் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் நிச்சயம் என்னுடைய மற்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகிய இருவருடைய சாதனையையும் முறியடிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன், ஏனென்றால் இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுமே தற்பொழுது மிகச் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுமே 1000 விக்கெட்களை எடுப்பார்கள், இதில் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வருகிறார் என்று ஷேன் வார்னே பாராட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.