முகமது ஷமி நீக்கம்; டெஸ்ட்டில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு - பிசிசிஐ முடிவு
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷமி நீக்கம்?
இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி நாளை (மே 24) அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அந்த இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது முழங்கால் விளையாடும் அளவுக்கு தயாராகவில்லை.
பிசிசிஐ முடிவு
இதனால், அவருக்குப் பதிலாக வேறு சில வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய தேர்வு குழு தேர்வு செய்யவுள்ளது. எனவே முதன்மை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளிலும், அவருடன் கூட்டணியாகப் பந்துவீசுவதற்காக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணாவும் இடம் பெறுவார்.
கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் காம்போஜை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அன்ஷுல் காம்போஜ் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.
இதற்கிடையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.