அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்த விஜய் பட இயக்குனர்... அலறியடித்து ஓடிய ஷாலு ஷம்மு ..!!
நடிகை ஷாலு ஷம்மு சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஷாலு ஷம்மு
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கம்"படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ஷம்மு ஷாலு. இப்படத்தை தொடர்ந்து "தமிழுக்கு என் ஒன்று அழுதவும்" மற்றும் "மிஸ்டர் லோக்கல்" போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருக்கும் ஷாலு ஷம்முவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அவ்வப்போது நடிகைகள் தங்களுக்கு சினிமா துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்து வரும் நிலையில், ஷாலு ஷம்முவும் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.
கசப்பான அனுபவம்
இது குறித்து அவர் கூறுகையில், “ நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஒரு படத்தில் நடிக்க தன்னை அணுகிய போது, த ன்னிடம் வரும் போது சேலை உடுத்தி வரச் சொல்லியதாகவும், அவர்கள் சொன்ன விலாசத்திற்கு சென்ற போது தான் தான் அது அவர் வீடு என்பதை உணர்ந்ததாக குறிப்பிட்டார் ஷாலு.
வீட்டில் அனைவரும் வெளிநாடு சென்று இருப்பதாக இயக்குனர் சொன்னதாக குறிப்பிட்ட நிலையில்,
கேரக்டரைப் பற்றி பேசுவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசினார் என்றும் அப்போதே என்னவோ தப்பாக இருப்பது தெரிந்து தனக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது என தெரிவித்தார்.
இதைப் பார்த்த இயக்குநர் படுக்கையறையில் ஏசி இருக்கிறது என சொல்ல தான் பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஷாலு ஷம்மு.