‘’ மீண்டும் வருகிறான் இந்தியன் சூப்பர் ஹீரோ ‘’- திரைப்படமாக வெளியாகிறது சக்திமான்

movie sonypictures shakthimann 90ssuperhero
By Irumporai Feb 11, 2022 05:27 AM GMT
Report

சக்திமான் தொடர் தற்போது திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 90 s kids - களின் விருப்பமான முதல் சூப்பர் ஹீரோ யார்  என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லுவார்கள் சக்திமான்தான் என்று ஆம் அந்த அளவுக்கு 90 முதல் 2000 வரை இந்தியாவில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்தவர் சக்திமான்.

இந்த நிலையில், சக்திமான் திரைப்படமாக பெரிய திரையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சோனி பிக்சர்ஸ் இந்தியா இந்தப் படத்தைத் தயாரிக்கின்றார். இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

ஏற்கனவே தூர்தர்ஷனில் தொடராக எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பான  சக்திமான் தொடரில் நடித்த முகேஷ் கன்னாவின் பீஷ்ம் இன்டர்நேஷனல் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை யார் இயக்குவிருக்கிறார்கள், நடிக்கும் நடிகர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியாகவில்லை. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவிலும் சூப்பர் ஹீரோ கதைகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்க சக்திமான் மூலம் வந்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்கும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பதால் ஹாலிவுட் படங்களுக்கு  இணையாக ஒரு இந்திய சூப்பர் ஹீரோவை காணலாம் என 90 ஸ் கிட்ஸ்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.