ஷகீலா குடித்து விட்டு அதை செய்வார்.. அதனால்தான் தாக்கினேன் - வளர்ப்பு மகள் பரபரப்பு பேட்டி!

Tamil Cinema Tamil nadu Shakeela Tamil Actress
By Jiyath Jan 21, 2024 06:45 PM GMT
Report

எதற்காக ஷகீலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து வளர்ப்பு மகள் ஷீத்தல் பேசியுள்ளார்.

நடிகை ஷகீலா

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகீலா வசித்து வருகிறார். இவர் தனது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.

ஷகீலா குடித்து விட்டு அதை செய்வார்.. அதனால்தான் தாக்கினேன் - வளர்ப்பு மகள் பரபரப்பு பேட்டி! | Shakilas Adopted Daughter Sheetal Interview

இதற்கிடையில் ஷகீலாவுக்கும், ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஷகீலா மீது ஷீத்தல் கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார். மேலும், ஷகீலாவின் வழக்கறிஞரையும் அவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

தாக்குதல் எதற்காக? 

இந்நிலையில் எதற்காக ஷகீலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து ஷீத்தல் கூறியதாவது "ஷகீலா குடி போதையில் எனது தாய் மற்றும் சகோதரி குறித்து மோசமாக பேசினார்.

ஷகீலா குடித்து விட்டு அதை செய்வார்.. அதனால்தான் தாக்கினேன் - வளர்ப்பு மகள் பரபரப்பு பேட்டி! | Shakilas Adopted Daughter Sheetal Interview

அதனால்தான் சண்டை வந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து என்னை ஷகீலா கடுமையாக தாக்குவார். அவர் என்னை முதலில் அடித்தார்.

அதனால்தான் நான் திருப்பி அடித்தேன். பிறகு அவரது வழக்கறிஞர் சமாதானம் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து எங்களது தலைமுடியை பிடித்துக்கொண்டார். அதன் காரணமாகத்தான் எனது அம்மா அவரை கடித்தார்" என்று தெரிவித்துள்ளார்.