ஸ்டம்புகளை வீசிய ஷகிப் உல் ஹசன்: மன்னிப்பு கோரி அறிக்கை

cricket statement Shakib ul Hasan
By Irumporai Jun 12, 2021 11:55 AM GMT
Report

தாகா ப்ரீமியர் லீக் போட்டியில் கோபத்தில் மோசமாக நடந்து கொண்டதற்காக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியுட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார்.

அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவியது பலரும் ஷகிப்பின் இந்த செயலை கண்டித்தனர்.

இந்த நிலையில் தான் கோபப்பட்டது குறித்து ஷகிப் மன்னிப்புக் கோரியுள்ளார். "அன்பார்ந்த ரசிகர்களே, எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு, ஆட்டத்தைப் பார்த்துவந்த அனைவரது அனுபவத்தையும் கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இதனால் வருத்தமடைந்தவர்களிடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அனுபவம் வாய்ந்த வீரனாக நான் அது போல நடந்திருக்கக் கூடாது.  சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் மீறி இப்படி நடந்துவிடும். அணிகளிடமும், அதன் நிர்வாகத்திடமும், தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகளிடமும் எனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என்று நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.