கிரிக்கெட்டுக்கு bye..? MP சீட்க்கு ஹாய்..!! அரசியலுக்கு தயாரான முன்னாள் KKR வீரர்..குவியும் விமர்சனங்கள்..!
பெரும்பாலான நாட்டின் பிரபலங்களை அரசியலில் இறக்கி அதனை ஓட்டாக மாற்றுவதில் பல கட்சிகளும் மும்முரம் காட்டும்.
MP election
அப்படி நாம் நாட்டில் மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் இது ஒரு வழக்கமே. அந்த வரிசையில் இணைந்துள்ள மற்றொரு கிரிக்கெட் பிரபலம் தான் ஷகிப் அல் ஹசான். வங்காளதேச அணியின் கேப்டனான ஷகிப் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயாராகியுள்ளார்.
இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாத ஷகிப், தற்போது அந்நாட்டின் பிரதமராகவுள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகியுள்ளார்.
விமர்சனம்
அவர் தனது சொந்த தொகுதியான மகுரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இன்று வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், அண்மையில் பிரச்சாரம் சென்ற ஷகிப்பின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கிரிக்கெட் களத்தில் மிகவும் கோபக்காரரான ஷகிப், தன்னை பெண்கள் சூழ்ந்துகொண்டு போட்டோ எடுத்து போது, கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.
கிரிக்கெட்டில் அவர் இன்னும் ஓய்வை அறிவிக்காத நிலையில் அவர் வங்கதேச பிரதமர் வங்கதேசத்தை பொறுத்தமட்டில் கிரிக்கெட் விளையாடினாலும் கூட வீரர்கள் அரசியலில் இணைந்து செயல்படவும், போட்டியிடவும் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் தடை விதிப்பது இல்லை. இதனை பயன்படுது்தி தான் ஷகிப் அல் ஹசன் அரசியலில் நுழைந்தார்.