கெத்தா,மாஸா நாங்க ரெடியா இருக்கோம் - பிரபல கிரிக்கெட் வீரர் அசத்தல் பேச்சு
வருகிற டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்கு பங்களாதேஷ் அணி தயாராக உள்ளது என்று அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட உள்ளது.
அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை போட்டிக்கான தொடருக்கான தங்களது அணி வீரர்களை அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளது, அனைத்து அணிகளும் எப்படியாவது இந்த தொடரில் கோப்பையை வென்று விட வேண்டும் என்று தாராமான அணி வீரர்களை தங்களது அணியில் இணைத்துள்ளது.
மேலும் உலக கோப்பை தொடர் நெருங்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால் ,அது சம்பந்தமான பேச்சுகள் அடிபட தொடங்கிவிட்டது, இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது அணி குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், வருகிற உலக கோப்பை தொடரில் எங்களது அணி வெற்றி பெறுவதற்கு சிறந்த மனநிலையோடு தயாராக உள்ளது, மேலும் துபாயில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் தொடர் உலக கோப்பை தொடருக்காக வீரர்கள் தயாராவதற்கு மிகச்சிறந்த முன்னேற்பாடாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் கடைசியாக விளையாடிய 3 டி20 தொடரில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது,உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை எதிர்கொள்வதற்கு மிகப்பெரும் தைரியத்தை கொடுத்திருக்கிறது இதனால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம் என்று ஷகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டி.20 உலகக்கோப்பைக்கான பங்களாதேஷ் அணி ;
மஹ்மதுல்லாஹ் ரியாத் (கேப்டன்), முகமது நயீம் சேக், சவ்மியா சர்கார், லிடன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹிம், அஃபிஃப் ஹூசைன், நூருல் ஹசன், மெஹ்தி சஹன், நசும் அஹமத், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹமத், முகமது ஷைஃபுதீன், ஷமிம் ஹூசைன்.