தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம்: கோபத்தில் பொங்கி எழுந்த ஷகிலா
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவி வரும் நிலையில் நடிகை ஷகிலா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக வலம் வருவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விஷயம் தான். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்த நொடியில் இருந்து பிரிவுக்கான காரணம் தொடங்கி, மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் வரை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிலர் வதந்திகளையும் அவ்வப்போது பரப்பிவருகின்றனர்.இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்ததைப் பற்றி, ஷகிலா அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
'தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கூறுவது, இருவரின் தனிப்பட்ட விஷயம். சுமார் 18 ஆண்டுகள் வரை கணவர் - மனைவியாக வாழ்ந்து அது சரி வராமல் தற்போது பிரிந்துள்ளனர்.ஏன் எல்லோரும் தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தையே பெரிதுபடுத்தி பேசிவருகிறீர்கள். அதுதான் இப்போ நாட்டுக்கு முக்கியமா. அவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள் என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? . முதலில் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதை பாருங்கள், பின்பு மற்ற விஷயங்களை யோசிக்கலாம்.
அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லாதீர்கள். அது சம்மந்தப்பட்டவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?. நடிகர் ரஜினியின் மனநிலையை சற்று யோசித்துப்பார்த்து பேசுங்கள். தேவையில்லாமல் சிம்புவை இதனுள் ஏன் இழுக்கின்றீர்கள்?. அவர் யாரை மணந்தால் உங்களுக்கு என்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் அடுத்தவர்களின் தனி வாழ்க்கையை பற்றி வதந்தி பரப்பி பேசுவதில் அப்படி என்ன ஆனந்தம் இருக்கின்றது. இனி எந்த விஷயமாக இருந்தாலும் இவ்வாறு வதந்தி பரப்பி சம்மந்தப்பட்டவர்களை காயப்படுத்தி பேசுவதை நிறுத்துங்கள் என ஷகிலா காட்டமாக பேசியுள்ளார்.