தவறான இடத்தில் தொட்ட டாக்டர்; பளார் என அறைந்த நடிகை ஷகிலா..!

Tamil Cinema Shakeela
By Jiyath Jul 13, 2023 06:09 AM GMT
Report

நடிகை ஷகிலா தனக்கு மருத்துவமனையில் நடந்த நிகழ்வு குறித்து பேசியிருக்கிறார்.  

ஷகீலா

ஷகிலா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரின் கவர்ச்சிப் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் கவர்ச்சிப் படங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது காமெடிய மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லால் நிகழ்ச்சி தொகுப்பாளராக  யூடியூபில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

தவறாக தொட்ட டாக்டர்

இந்நிலையில், அண்மையில் சீரியல் நடிகை ரிஹானாவிடம் நடந்த நேர்காணல் ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்வியை கேட்டிருந்தார். அப்போது ஷகிலா தனக்கு மருத்துவ மனையில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

தவறான இடத்தில் தொட்ட டாக்டர்; பளார் என அறைந்த நடிகை ஷகிலா..! | Shakeela Shared A Bad Experience At Hospital 09

அதில் "எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அழைத்து மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது டாக்டர் எழுதியது எனக்கு புரியாத காரணத்தால் அவரிடம் சந்தேகம் கேட்ட சென்றேன். அப்போது அந்த டாக்டர் என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் என்று கேட்டார்.

கோவம் அடைந்த நான் அவரை பளார் பளார் என்று அறைந்தேன். சத்தம் கேட்டு உள்ளே வந்த செவிலியர் என்னை சமாதனப் படுத்தினார் என்று ஷகீலா பேசியிருந்தார்.

பின்னர் அந்த டாகடர் யார் என்பது குறித்து எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றும் மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நிச்சயமாக அடுத்த வீடியோ வில் சொல்வேன் என்றும் பேசியிருந்தார் ஷகீலா