தொடரும் பாலியல் குற்றங்கள் - கொந்தளித்த நடிகை ஷகீலா

Actor Shakeela Sexual offenses
By Thahir Sep 26, 2021 03:37 AM GMT
Report

பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு, அரபு நாடுகளில் வழங்குவது போன்று தண்டனை வழங்க வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா ஆவேசமாக பேசினார்.

‘உச்சம்’ என்ற குறும் படத்தின் அறிமுக கூட்டம், சென்னையில் நடந்தது. இது பெண் குழந்தைகள்கற்பழிப்பை கருவாக கொண்ட படம்.

தொடரும் பாலியல் குற்றங்கள் - கொந்தளித்த நடிகை ஷகீலா | Shakeela Sexual Offenses

அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- “குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு அரபு நாட்டில் கடுமையான தண்டனை கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தண்டனைகளை இங்கேயும் கொடுக்க வேண்டும். இது என் ஒருத்தியின் தனிப்பட்ட கருத்து அல்ல. எல்லோருடைய கருத்தும்.

இந்த படத்தில், திருநங்கை ஒருவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர்களை திருநங்கை என்று அழைப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.

அவர்களும் பெண்கள்தான். பெண்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கிறதோ, அப்படி இவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.” என்று ஷகீலா பேசினார்.