எனக்கு அந்த பழக்கம் இருக்கு; பிக்பாஸில் அதுக்கென ஒரு அறை கொடுங்க - அடம்பிடித்த ஷகீலா!
நடிகை ஷகீலா தான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி பேசியுள்ளார்.
ஷகீலா
மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. 1990 களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகீலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெஸ்ட்டெண்டாக கலந்து கொண்டார் ஷகிலா. ஆனால் உள்ளே நுழைந்த வேகத்திலேயே வெளியில் வந்துவிட்டார். அவர் உள்ளே இருக்கும்போது சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
பேட்டி
அண்மையில் ஷகீலா அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது "எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவருக்குக்கூட ஒரு பழக்கம் இருக்கும். அப்படித்தான் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம். தெலுங்கு பிக்பாஸில் புகை பிடிப்பதற்கு என்று ஒரு அறை கிடையாது.
அதனால்தான் நான் ஆங்காங்கே அமர்ந்து புகை பிடித்தேன். தனியாக அறை இருந்திருந்தால் நான் ஏன் வெளியே உட்கார்ந்து புகை பிடித்திருப்பேன். அங்கே சிகரெட் பிடிக்க ஒரு கவர் போடும்படி கோரிக்கை வைத்தேன். ஆனால் பிக்பாஸ் அதை செய்யவில்லை. என்னுடைய ஒரே ஃப்ரெண்ட் சிகரெட்தான். 30 வருடங்களாக என்கூடவே சிகரெட் இருக்கு. அதை என்னால் விடமுடியவில்லை.
நான் ஒருநாளைக்கு நிறைய சிகரெட் பிடிப்பவள். ஆனால் அங்கோ ஒரு நாளைக்கு பத்து சிகரெட்தான் கொடுத்தார்கள். சிகரெட் கொடுக்கவில்லை என்றால் நான் தூங்கமாட்டேன் என்று அடம்பிடித்துதான் நான் சிகரெட் வாங்கினேன்" என்று பேசியுள்ளார்.