மம்முட்டி, மோகன்லால் கூட என்கிட்ட அப்படி நடந்துகிட்டாங்க - உண்மை உடைத்த ஷகிலா

Mammootty Mohanlal Shakeela
By Sumathi Apr 12, 2023 08:10 AM GMT
Report

80-90-களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா.

 நடிகை ஷகிலா

தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மம்முட்டி, மோகன்லால் கூட என்கிட்ட அப்படி நடந்துகிட்டாங்க - உண்மை உடைத்த ஷகிலா | Shakeela About Mammooty And Mohan Lal

குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதன்மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். அதன்பின் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாத இவர் மிளா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

கோபம் நியாயம்

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் ரசிகை. மம்முட்டி மேலே எனக்கு கோபமில்லை. ஆனால், அவர்கள் தான் என்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்து இருந்தார். இது கூட நான் கேள்விப்பட்டது தான் தவிர உண்மையா என்று எனக்கு தெரியாது.

மம்முட்டி, மோகன்லால் கூட என்கிட்ட அப்படி நடந்துகிட்டாங்க - உண்மை உடைத்த ஷகிலா | Shakeela About Mammooty And Mohan Lal

மம்முட்டி ஒரு கட்டத்தில் கோவில் விழாக்களுக்கு என்னை அழைப்பு விடுக்க மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். அவருடைய கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம்.

10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வர தானே செய்யும். அப்படித்தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அவர்கள் என்னை தடை செய்ய நினைத்தபோது நானே என் நடிப்பை தடை செய்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.