படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் சவால்!

Shah Rukh Khan Bollywood Deepika Padukone
By Sumathi Dec 19, 2022 12:26 PM GMT
Report

பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம், ஷாருக்கானின் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பதான்

பதான் திரைப்படத்தை திரையரங்குகளில் தடை செய்ய வேண்டும் என சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து, மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் "ஷாருக்கான் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, அதை தனது மகளுடன் பார்க்கிறேன் என்று உலகுக்குச் சொல்ல வேண்டும்.

படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் சவால்! | Shahrukh Khan To Watch Pathaan With Daughter

நபிகள் நாயகத்தைப் பற்றி இதே போன்ற படத்தைத் தயாரித்து இயக்க நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," எனத் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பாடலின் தலைப்பு 'பேஷாரம் ரங்' என்று நான் நம்புகிறேன்.

எதிர்ப்பு

மேலும், காவி மற்றும் பச்சை நிறங்கள் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆட்சேபனைக்குரியது. மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், தவறினால் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம் என கூறினார்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே 'பதான்' இந்தி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.