அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான்-நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar
By Swetha Subash Jun 03, 2022 12:28 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழில் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா மற்றும் ஜெய் ஆகியோர் நடித்து வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ குமார்.

முதன் முதலாக இயக்கி வெளிவந்த ராஜா ராணி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக அட்லீ மாறினார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான்-நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்! | Shahrukh Khan Nayanthara Film Title Announced

இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்கி வரும் படத்திற்கு தான் தற்போது ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் நாயகனாக பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக் கானும் நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடித்து வருகின்றனர்.

ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக தயாராக உள்ள இப்படத்தின் பெயரை அறிவிக்கும் விதமாக தற்போது டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டு அடுத்த வருடம் ஜுன் மாதம் 2-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர்கள் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷாருக் கானின் மனைவி கௌரி கான் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.