தன்னை ஏலத்தில் எடுக்காமல் போனது சென்னை அணி செய்த பிழை - அதிரடியாக ஆடி நிரூபித்து காட்டிய இளம் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை ஏலத்தில் எடுக்காமல் போனது மாபெரும் பிழை என்பதை உணர்த்தும் வகையில் தமிழக வீரர் ஷாருக்கான் ரஞ்சிக்கோப்பையில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுப்பதற்காக ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஷாருக் கானை இம்முறை ஏலத்தில் எடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போயிருக்கிறது.
அடிப்படை தொகை ரூ.40 லட்சம் என ஏலம் விடப்பட்ட ஷாருக்கானை வாங்க தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டியிருந்தாலும்
பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தொகையை அதிகரித்து மோதியதும் ரூ.5 கோடி தாண்டியவுடன் ஒதுங்கிக்கொண்டது. இறுதியில் ரூ. 9 கோடிக்கு பஞ்சாப் அணி ஷாருக்கானை ஏலத்தில் எடுத்தது.
அதிரடி ஆட்டக்காரராக வலம் வரும் ஷாருக்கான் சென்னை அணியின் எதிர்காலத்திற்கு நிச்சயம் தேவைப்படும் வீரராக இருக்கிறார்.
தோனிக்கு அடுத்தப்படியாக ஒரு நல்ல ஃபினிஷர் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் தேவை. இந்த சூழலில் தான் சென்னை அணி அவரை தவற விட்டுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே செய்தது மாபெரும் பிழை என்பதை ஷாருக்கான் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
ரஞ்சிக்கோப்பை தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.
முதல் இன்னிங்ஸில் டெல்லி 452 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய தமிழக அணி 162 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமயத்தில் களமிறங்கிய ஷாருக்கான்,
சற்றும் பதற்றமின்றி தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்ததுடன் சதமடித்து அசத்தினார்.
அவர் 113 பந்துகளில் 150 ரன்களை விளாசினார்.
132.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசி வரும் ஷாருக்கை பார்த்து சக வீரர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
You May Like This