முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Covid Positive Shahid Afridi Pakistani cricketer
By Thahir Jan 27, 2022 11:14 PM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கராச்சியில் நேற்று தொடங்கிய 7-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாட உள்ளார்.

கொரோனா காரணமாக அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வழிகாட்டுதலின்படி 7 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து கொரோனா இல்லை என்று முடிவு வந்த பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைய முடியும்.

41 வயதான அப்ரிடி இந்த சீசனுடன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் முழுமையாக ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.