காயம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடியிடம் நலம் விசாரித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Virat Kohli Viral Video
By Nandhini Aug 26, 2022 09:47 AM GMT
Report

காயம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடியிடம் இந்திய வீரர்கள் நலம் விசாரித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

காயம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி

சமீபத்தில் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும்போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு வலது முழங்கால் தசைநார் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவால் 4-6 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, காயம் காரணமாக அவர் வர இருக்கும் ஆசியக் கோப்பையிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

Shaheen Afridi - viral video

நலம் விசாரித்த இந்திய வீரர்கள்

இந்நிலையில், காயம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடியிடம் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பண்ட், சஹால் நலம் விசாரித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியுடன் இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சாஹல், விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் என்ன அழகாக நட்புடன் பேசுகிறார்கள் என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.