‘’இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம் இல்ல பாஸ் இவங்க மூன்று பேர்தான் ’’ - மனம் திறந்த பா.க் கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்த போதும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த நிலையில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும், ரிஸ்வானும் துவக்க வீரர்களாக களமிறங்கி துவக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்குவித்தனர்.
ஆகவே பாகிஸ்தான்குவித்ததன் மூலம் 17.5 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றுள்ளது. பாபர் அசாம் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியின் மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஷாஹின் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய ஷாஹின் அப்ரிடி:
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு ஷாஹின் அப்ரிடி பேசுகையில், 'பந்துவீச்சில் நான் சிறப்பாக செயல்பட்டோம் முடிந்தவரை விரைவாக விக்கெட் எடுக்கவேண்டும் என்பது மட்டுமே திட்டம். இதற்காகவே நான் அதிகமான பயிற்சிகளும் எடுத்தேன், நேற்றைய வலைபயிற்சியின் போதும் நான் இதற்காகவே அதிக பயிற்சிகள் மேற்கொண்டேன்.
புதிய பந்திற்கு எதிராக பேட்டிங் செய்வது மிக கடினம். எங்களின் இந்த வெற்றிக்கு பாபர் அசாமும், ரிஸ்வானும் தான் காரணம். இருவரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுமே பலமானது தான், இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியை தக்க வைத்து கொண்டு இறுதி போட்டி வரை செல்வோம்' என்று தெரிவித்தார்