வங்கதேச வீரரை அடித்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் - திடுக்கிடும் வீடியோ இதோ...!

டி20 போட்டியின் போது வங்கதேச வீரர் அஃபிஃப் ஹொசேனுக்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரீடி  கொடுத்த அடி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி நேற்று டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் வங்கதேச அணி பேட்டிங்கின் போது சாஹீன் அஃப்ரிடி செய்த விஷயம் பரபரப்பை கிளப்பியது. அந்த அணியின் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். ஆட்டத்தின் 3வது ஓவரை சாஹீன் அஃப்ரிடி வீச முதல் பந்திலேயே அஃபிஃப் சிக்ஸர் பறக்கவிட்டு இன்னிங்ஸை தொடங்கினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அஃப்ரிடி அடுத்த பந்திலேயே பதிலடி கொடுத்தார்.

அடுத்த பந்தை குட் லென்ந்தாக வீசிய போது அதனை அஃபிஃப் தடுப்பாட்டம் மேற்கொண்டு தப்பித்தார். அப்போது கீழே விழுந்த பந்தை எடுத்த சாஹீன் அஃப்ரிடி கிரீஸுக்கு உள்ளே நின்றுக்கொண்டிருந்த அஃபிஃப் ரன் ஓடிவிடக்கூடாது என ஸ்டம்பை நோக்கி ஆக்ரோஷமாக எறிந்தார். ஆனால் அந்த பந்து எதிர்பாராத விதமாக அஃபிஃப் ஹொசைனின் காலில்பட்டு காயத்தை ஏற்படுத்தியது. 

வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அஃபிஃப் ஹொசைனை சக வீரர்கள் சேர்ந்து தூக்கி நிறுத்தினர். ஆனால் அவரால் நிற்க கூட முடியவில்லை. வலியினால் நொண்டி நொண்டி நடந்ததால் ரசிகர்கள் சோகமாகினர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May like This 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்