"உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இப்படிதான் வீழ்த்தினேன்” - சஹீன் அப்ரிடி பேட்டி
2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எப்படி வீழ்த்தினேன் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சஹீன் அப்ரிடி பேசியுள்ளார்.
2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பரிதாப தோல்வியை தழுவியது.
இந்திய அணி அதற்கு அடுத்தடுத்த போட்டியில் தோல்வியைத் தழுவி அரையிறுதி சுற்றுக்கு கூட செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்ததே.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹின் அப்ரிடி இந்திய அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைபற்றி அசத்தினார்.
இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டிகளில்
பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட இந்திய அணியை வெற்றி பெறவில்லை என்ற ஒரு மோசமான வரலாற்றை மாற்றியமைத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சஹீன் அப்ரிடி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்தியதற்கு பின்னால் இருந்த ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
அதில், “விராட் கோலிக்கு எதிராக பந்து வீசும் பொழுது சற்று சிந்தித்தேன், அப்பொழுது இடது பக்கம் இருக்கும் பவுண்டரி மிகவும் சிறியதாக இருப்பதால் நான் வேகமாக பந்து வீசினால் விராட் கோலி எளிதாக புல் ஷாட் அடித்து ரன் அடித்துவிடுவார்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக ஸ்லோயர் பவுன்சர் வீசினேன், அதிர்ஷ்டவசமாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தது.
விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன், மேலும் அந்த போட்டியில் இந்திய அணியின் தூண்களாக இருந்த ரோஹித் சர்மா,கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்தினேன்.
இதில் விராட் கோலி தான் இந்திய அணியின் முதுகு தண்டு” என்று சஹீன் பேசியிருந்தார்.