பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்டது.

அவருக்கு எதிரான இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 70 வயதான தம்பி ஷாபாஸ் ஷெரீஃப், நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது அவர் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார்.