‘’ வீடியோ காலில் பேசிய ஆர்யன் ‘’ - செலவுக்குப் பணம் அனுப்பிய ஷாருக்!

jail videocall shahrukhkhan aryankhan
By Irumporai Oct 16, 2021 08:59 AM GMT
Report

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது வரும் 20ம் தேதி கோர்ட் தீர்ப்பு வர உள்ளது, இதில் நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாட உள்ளார்.

வரும் 20ம் தேதி எப்படியும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது ஷாருக்கான் குடும்பம். ஆர்யனும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்களும் ஆர்தர் ரோடு சிறையில் கொரோனா தடுப்பு பிரிவில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக  தனிமைப்படுத்துதல் முடிவடைந்த நிலையில்  அனைவரும் வழக்கமான சிறைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்யன் சிறையில் இருந்து தன் தந்தை ஷாருக்கான் மற்றும் தாயார் கவுரி கான் ஆகியோருடன் வீடியோ காலில் பேசியுள்ளதக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது தாய் தந்தை இருவரிடமும் ஆர்யன் பேச மொத்தம் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . வீடியோ காலில் வழக்கமான விசாரிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் தங்களின் பெற்றோருடன் போனில் பேச அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் உறவினர்கள் கைதிகளை வந்து நேரில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே கைதிகள் தங்களின் உறவினர்களுடன் போன் மற்றும் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் ஆர்யன் அவரின் பெற்றோருடன் பேச அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்யனுக்கு சிறப்புச் சலுகை எதுவும் காட்டப்படவில்லை என்றும் ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

‘’ வீடியோ காலில் பேசிய ஆர்யன் ‘’  - செலவுக்குப் பணம் அனுப்பிய ஷாருக்! | Shah Rukh Khan Spokearyan Khan Through Video Call

சிறையில் கைதிகள் தங்களின் உறவினர்களுடன் பேச 11 போன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கைதிகள் தங்களின் உறவினர்களுடன் போன் மூலம் பேசிக்கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கைதிகள் போனில் பேசும்போது சிறை அதிகாரி ஒருவர் இருப்பார் என்றும். ஆர்யனுக்கு சிறையில் N956 மாஸ்க் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யன் சிறையில் அங்குள்ள கேன்ட்டீனில் கிடைக்கும் பிஸ்கட்டுகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வாங்கிப் பயன்படுத்துகிறார். கைதிகள் ஒரு மாதத்திற்கு 4500 ரூபாயை தங்களின் உறவினர்களிடமிருந்து மணி ஆர்டராக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடிகர் ஷாருக்கான் தன் மகனின் செலவுக்காக கடந்த 11ம் தேதி ரூ.4500 அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தில் சிறை கேன்ட்டீனில் தேவையான உணவுகளை ஆர்யன் வாங்கி சாப்பிட்டு வருகிறார்.

சிறையில் 7 மணிக்கு காலை சாப்பாடும், 11 மணிக்கு மதிய சாப்பாடும், மாலை 6 மணிக்கு இரவு சாப்பாடும் வழங்கப்படுகிறது. மதியச் சாப்பாடு முடிந்த பிறகு இரவு சாப்பாடு வரை கைதிகள் சிறைக்குள் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படும்.

இரவு சாப்பாடு முடிந்த பிறகு கைதிகள் அவர்களின் அறைக்குள் அடைக்கப்பட்டுவிடுவர். ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட பெண், பைகுலாவில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வெறும் 1000 கைதிகளை மட்டுமே அடைக்கும் வசதி கொண்ட ஆர்தர் ரோடு சிறையில் தற்போது 3,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறையில் பெரும்பாலும் விசாரணை கைதிகள் மட்டுமே அடைக்கப்படுவது வழக்கம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.