நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யா கானுக்கு ஜாமீன் மறுப்பு
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யா கானுக்கு பெயில் மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை முடிந்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதில் ஆர்யன் கான் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது இதில், தீர்ப்பு வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். ஆர்யன் கான் தற்போது வரை 12 நாட்களாக சிறையில் இருந்தது வருகிறார்.
இதனால் அவர் வரும் புதன்கிழமை வரை சிறையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வழக்கு விசாரணையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்,
"ஆர்யன் கான் போதைப் பொருளுக்கு தொடர் வாடிக்கையாளராக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவர் போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்." என கூறியுள்ளார்.