ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து அனுப்பிய நடிகை நயன்தாரா - சூழ்ந்த ரசிகர்கள்
சென்னையில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேரில் சந்தித்து பேசினார்.
விறுவிறுப்படையும் ஜவான் திரைப்பட தயாரிப்பு
அண்மையில் நடிகர் ஷாருக்கான் நடித்து திரைக்கு வந்த பதான் திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வருகிறார். இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகரான யோகிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையடுத்து இத்திரைப்படம் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதான் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து ஷாருக்கான் நேற்று சென்னை வந்தார்.
நயன்தாராவுடன் ஷாருக்கான் சந்திப்பு
நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாரா இல்லத்திற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். இதையறிந்த அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றதால் அந்த குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன் பேசிவிட்டு, விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
பின்னர் தனது வீட்டில் இருந்து கிளம்பிய நடிகர் ஷாருக்கானை, நயன்தாரா அவரது கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
ஷாருக்கான் காரில் ஏறுவதற்கு முன்பாக நயன்தாரா ஷாருக்கானின் கன்னத்தில் முத்தமிட்டார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் அங்கிருந்த எல்லோருக்கும் பறக்கும்முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The way Shah Rukh kissed Nayanthara goodbye @iamsrk you have my whole heart ?❤️ #Nayanthara #Jawan pic.twitter.com/0zoBaBQGMP
— Samina ✨ (@SRKsSamina_) February 11, 2023